[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தின் 3 இடங்கள் உட்பட நாட்டின் 32 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம்
  • BREAKING-NEWS கொடைக்கானலில் ரூ.20 கோடியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் சோதனை முறையில் பொது இயக்கப்பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும் - போக்குவரத்துத்துறையில் புதிய அறிவிப்புகளை பேரவையில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வெளியிட்டார்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு

மங்கி வரும் ரிக்-210 நட்சத்திரம்.. இனி நடக்கபோவது என்ன..?!

astronomers-observe-mysterious-dimming-of-a-young-star-named-rik-210

சுமார் ஐந்து மில்லியன் முதல் 10 மில்லியன் வயது கொண்ட ரிக்-210 என்ற நட்சத்திரத்தின் பிரகாசம் மங்கி வருவதாக சர்வதேச விண்வெளியாளர்கள் தெரிவிக்கின்றனர். இது சூரியனின் பாதியளவு பிரகாசம் கொண்டதாகும்.

புவியிலிருந்து சுமார் 472 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்திருக்கும் ரிக்-210 நட்சத்திரம் திடீரென 5.67 புவிநாட்களில் அதன் ஒளியிலிருந்து 15 சதவிகித பிரகாசத்தை இழந்துள்ளது. சாதாரணமாக நட்சத்திரமானது பழுப்பு நிறத்திலான குள்ளமான அமைப்பை தீடிரென அடைய முடியாது என விஞ்ஞானிகள் தெரிவிகின்றனர். ஆனால் இப்படி திடீர் நிகழ்வுகள் புதிர்போல் உள்ளது எனவும் இதனால் என்ன நடக்கும் என்பது மர்மமாக உள்ளது எனவும் கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியின் ட்ரேவர் டேவிட் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு தெரிவிகின்றன.

பொதுவாக ஒரு நட்சத்திரம் தன் பிரகாசத்தை இழக்கும் போது, அதன் பின்னாலுள்ள மற்றைய ஒளிரும் பொருட்களின் பிரகாச்தையும் மறைக்கிறது. ஆனால் ரிக்-210 அவ்வாறான இயல்புகளை கொண்டிருக்கவில்லை. இது வித்தியாசமான நட்சத்திரங்களில் ஒன்று எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கடந்த 2015ல் இதுபோன்ற கேஐசி 8462852 எனும் நட்சத்திரம் மங்கிய நிலையை அடைந்தது குறிப்பிடதக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close