ரூபாய் நோட்டு விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ள நிலையில், அருகிலுள்ள ஏடிஎம் மையங்களைக் கண்டுபிடிக்க புதிய வசதி ஒன்றினை ஏற்படுத்தியுள்ளது.
கருப்புப்பணத்தை ஒழிக்கவும், கள்ளநோட்டு புழக்கத்தைத் தடுக்கும் நடவடிக்கையாகவும் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த முடிவால் சாமானியர்கள், தங்கள் கையிலுள்ள பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள வங்கி வாசலில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. நாடு முழுவதுமுள்ள ஏடிஎம் மையங்களில் பெரும்பாலானவை இயங்காத சூழலில், பணம் இருப்பு உள்ள ஏடிஎம் மையங்களில் கூட்டம் அலைமோதுவதையும் நாம் காணலாம். மக்களின் இந்த பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் இணையத்தின் மிகப்பெரிய தேடுபொறியான கூகுள், தனது ஹோம் பேஜில் புதிய வசதியினை அறிமுகப்படுத்தி உள்ளது. சர்ச் பார் எனும் தேடுதலுக்கான வார்த்தைகளை உள்ளீடு செய்யும் இடத்துக்குக் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள ஃபைன்ட் ஆன் ஏடிஎம் நியர் யு (Find an ATM near you) வசதி மூலம் அருகிலுள்ள ஏடிஎம் மையங்களை தெரிந்து கொள்ளலாம். கூகுள் மேப் உதவியுடன் அளிக்கப்படும் இந்த வசதி மூலம் அருகிலுள்ள வங்கிக் கிளைகளையும் நெட்டிசன்கள் உடனடியாக அறிந்து கொள்ளலாம். இந்த வசதி கூகுள் மேப்ஸ் தளத்தில் ஏற்கனவே இருந்தாலும், முக்கியத்துவம் கருதி கூகுள் ஹோம் பேஜுல் கொண்டுவரப்பட்டுள்ளது.
“குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்” - 5 மாநில அரசுகள் போர்க்கொடி
50 நாட்களை நிறைவு செய்த ‘பிகில்’, ’கைதி’ - ரசிகர்களுக்கு இயக்குநர் நன்றி
சாய்ந்த 50 ஆண்டுகள் பழமையான மரம் - மீண்டும் அழகாக நட்டு வைத்த அதிகாரிகள்
பாலியல் வன்கொடுமைக்கு 21 நாட்களுக்குள் தூக்கு - ஆந்திர பேரவையில் நிறைவேறியது திஷா மசோதா
அசாம் போராட்டத்தால் ஜப்பான் பிரதமரின் இந்திய வருகை ஒத்திவைப்பு?