[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது
  • BREAKING-NEWS குடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு
  • BREAKING-NEWS ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்

சமாஜ்வாதியில் இணைந்தார் சத்ருகன் சின்கா மனைவி - ராஜ்நாத்சிங்கை எதிர்த்து போட்டி?

shatrughan-s-wife-poonam-sinha-joins-sp-likely-to-go-up-against-rajnath-singh-in-lucknow-say-reports

சத்ருகன் சின்காவின் மனைவி பூனம் சின்கா சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளார். சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி திம்ப்ளே யாதவ் முன்னிலையில் இந்த இணைப்பு நடைபெற்றது. 

முன்னாள் மத்திய அமைச்சரும் பீகார் மாநிலம், பாட்னா தொகுதி பா.ஜ.க எம்.பி.யான சத்ருகன் சின்கா, பிரதமர் மோடியையும், கட்சி தலைமையையும் தொடர்ந்து விமர்சித்து வந்தார். இதையடுத்து, சத்ருகன் சின்ஹா காங்கிரஸ் கட்சியில் முறைப்படி, சமீபத்தில் இணைந்தார். இவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள நிலையில் இவரது மனைவி இன்று சமாஜ்வாதியில் இணைந்துள்ளார்.

                

மேலும், ராஜ்நாத் சிங் போட்டியிடும் லக்னோ தொகுதியில் அவரை எதிர்த்து பூனம் சின்ஹா போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. லக்னோ தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் இதுவரை வேட்பாளர்கள் நிறுத்தப்படவில்லை. அதனால், காங்கிரஸ் கட்சியின் பின்புலத்திலே ராஜ்நாத் சிங்கிற்கு எதிராக பூனம் களமிறக்கப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

                   

லக்னோ தொகுதி வேட்பாளராக இன்றே அறிவிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும், வேட்புமனுத் தாக்குதலுக்கு கடைசி நாளான ஏப்ரல் 18ம் தேதி அவர் வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close