[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கை அரசால் தேடப்பட்டு வந்த மதகுரு ஹஸிம் ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தார் - இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன
  • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை - அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உத்தரவு
  • BREAKING-NEWS வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற்றது - கிழக்கு இந்திய பெருங்கடல்- தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதற்கு எதிராக காவல்துறை அதிகாரிகள் 66 பேர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.79 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.34 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலையில் மாற்றமின்றி, டீசல் விலை 8 காசுகள் அதிகரித்து விற்பனை
  • BREAKING-NEWS சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை- பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளும் தீவிர சோதனை

"திமுக ஒரு பனங்காட்டு நரி, இந்த சலசலப்புக்கு அஞ்சி ஓடிவிடாது" மு.க.ஸ்டாலின்

stalin-condemned-for-duraimurugan-house-raid

வருமானவரி சோதனைக்கு எல்லாம் என்றைக்கும் அஞ்சமாட்டோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில், வேலூர் மாவட்டம் காட்பாடி - காந்திநகரில் உள்ள துரைமுருகனின் வீட்டுக்கு நேற்றிரவு பத்தரை மணிக்கு வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினரும் சோதனை நடத்துவதற்காக வந்தனர். அப்போது அங்கிருந்த திமுக தொண்டர்கள், சோதனை நடத்த எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து சுமார் 4 மணி நேரத்துக்குப் பிறகு, துரைமுருகனின் வீட்டில் சோதனை தொடங்கியது. 

அங்கிருந்த துரைமுருகனின் கார் உள்ளிட்ட வாகனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. காட்பாடியில் உள்ள துரைமுருகனின் வீட்டில் சோதனை நிறைவு பெற்ற நிலையில், 10 லட்சம் ரூபாய் மற்றும் 2 பைகளில் ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச்சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல, வாணியம்பாடியில் உள்ள திமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் தேவராஜின் வீட்டிலும் 2 மணி நேரம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். எனினும் காட்பாடி கிருஸ்தியான்பேட்டையில் உள்ள துரைமுருகன் மகன் கதிர் ஆனந்துக்குச் சொந்தமான பொறியியல் கல்லூரி மற்றும் வேலூர் அருகேயுள்ள துரைமுருகன் பண்ணை வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நீடித்து வருகிறது. 

இந்நிலையில், திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டின் வருமானவரி சோதனை நடத்தப்பட்டதற்கு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இவ்விவகாரத்தில் பிரதமர் மோடியே தலையிட்டு சோதனை நடத்த உத்தரவிட்டிருப்பதாகவும் திமுக ஒரு பனங்காட்டு நரி என்றும், இந்த வெற்று சலசலப்புக்கு அஞ்சி ஓடிவிடாது என்றும் ஸ்டாலின் உறுதிபட கூறியுள்ளார். 

மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி படுதோல்வி அடையும் என்ற கருத்து கணிப்புகளை ஏற்க முடியாததாலேயே, பிரதமர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். சிபிஐ, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளை சட்டை பையில் போட்டுக் கொண்டு பிரதமர் சாகசம் செய்துவருவதாக சாடிய அவர், காபந்து பிரதமரின் அதிகாரத்திற்கு சுதந்திரமான அமைப்புகள் கைகட்டி நிற்பது மோசமான நிலைமை என விமர்சித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close