[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அமமுகவுக்கு குக்கர் சின்னம் கிடைக்காவிட்டால் வேறு சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிடுவோம் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல் செய்தார்
  • BREAKING-NEWS திமுக கூட்டணியில் பெரம்பலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் வேட்புமனு தாக்கல்
  • BREAKING-NEWS தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் வேட்புமனுவை தாக்கல் செய்தார்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாதிகள் பயன்படுத்தியது 'விர்ச்சுவல் சிம் கார்டு'-தீவிரமடையும் விசாரணை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.67 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்

இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் நேர்காணலை தொடங்கியது திமுக

dmk-interview-for-candidate

21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்று வருகிறது.

மக்களவைத் தேர்தலுடன் எந்த நேரத்திலும் தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதி சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படலாம் எனத் தெரிகிறது. எனவே அரசியல் கட்சிகள் எவ்வளவு வேகத்தில் மக்களவைத் தேர்தலுக்கு தயாராகுகின்றனவோ, அதே வேகத்தில் 21 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கும் தயாராகி வருகின்றன. மக்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் விவரம் இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படும் எனத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடைபெறுகிறது. அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் நேர்காணல் நடத்துகின்றனர். நேர்காணலில் பங்கேற்போர், பரிந்துரையாளர்கள் மற்றும் ஆதரவாளர்களை அழைத்து வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இடைத் தேர்தலுக்கான நேர்காணலைத் தொடர்ந்து, நாளை மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்பி மனு அளித்தோரிடம் நேர்காணல் நடைபெறவுள்ளது. இதனிடையே திமுகவில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எவை என்பது குறித்த பேச்சுவார்த்தையும் தற்போது தொடங்கியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close