[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காரைக்குடியில் அனுமதியின்றி தேர்தல் அலுவலகம் திறந்த புகாரில், சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி மீது காரைக்குடி போலீசார் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS ஓபிஎஸ் மகன் அதிமுகவிற்காக பல ஆண்டுகளாக உழைத்து வருகிறார்; அதனால் அவரை வேட்பாளராக அறிவித்ததில் எந்த தவறும் இல்லை - அமைச்சர் கே.சி.வீரமணி
  • BREAKING-NEWS நெதர்லாந்து நாட்டின் உட்ரெச் நகரில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்
  • BREAKING-NEWS நேர்காணலுக்கு கூட வராமல், தான் தேர்தலில் போட்டியிடுவதாக சி.கே.குமரவேல் அறிவித்தது கட்சி கட்டுப்பாடுகளுக்கு முரணான செயல் - ஜனநாயக முறைப்படி நடைபெற்ற வேட்பாளர் தேர்வுமுறைக்கு எதிராக செயல்பட்டதால் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை அவரின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்கிறது
  • BREAKING-NEWS கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயான், மனோஜ் உட்பட 10பேரை மார்ச் 27ல் மீண்டும் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உதகை நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.52 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.87 காசுகளாகவும் விலை நிர்ணயம்

மக்களவை தேர்தல் கூட்டணி ! தேமுதிகவின் முடிவு நாளை அறிவிப்பு ?

dmdk-will-announce-about-alliance-tomorrow

மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பான முடிவை தேமுதிக நாளை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைவதில் இழுபறி நீடித்து வருகிறது. கூட்டணிக்கு வர தேமுதிக அதிக தொகுதிகள் கேட்பதாகவும், ஆனால் அதற்கு அதிமுக மறுப்பதால் இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது. இதனிடைய தேமுதிக தலைவர் விஜயகாந்தை, அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், “ கூட்டணி பற்றிய அனைத்து கட்சிகளின் முடிவுகளும் 6-ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும். பிரதமர் கலந்து கொள்ளும் மாநாட்டில் அனைத்து தலைவர்களும் பங்கேற்று நாட்டின் பிரச்னைகள் குறித்தும், யார் தலைமை ஏற்றால் நாட்டிற்கு நல்லது என்பது குறித்தும் தங்கள் கருத்துகளை முன்வைத்து பேசுவார்கள்” என்று தெரிவித்தார். அத்துடன் பிரதமர் கலந்து கொள்ளும் மாநாட்டில் விஜயகாந்த் உறுதியாக இருப்பார் என தெரிவித்தார். எனவே அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைவது தொடர்பான அதிகாரப்பூர்வ இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதனிடையே தேமுதிகவின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் தலைவர் விஜயகாந்த் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  இதில் தேமுதிக நிர்வாகிகள், உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். அப்போது மக்களவை தேர்தலில் தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பான முடிவை தேமுதிக நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வரும் நிலையில், கூட்டணியை இறுதி செய்வதற்கு அதிமுக தலைமை தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close