[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தி.மலையில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறன், மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்ய சிறப்புக்குழுக்களை அமைக்க பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு
  • BREAKING-NEWS வட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என மக்களிடம் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்
  • BREAKING-NEWS தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா

“ஸ்டாலின்- விஜயகாந்த் சந்திப்பில் அரசியல் பேசப்பட்டது”- பிரேமலதா விஜயகாந்த்

premalatha-vijayakanth-talks-about-party-alliance

ஸ்டாலின்- விஜயகாந்த் சந்திப்பில் அரசியல் பேசப்பட்டது என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சிகள் மும்முரமாக இறங்கியுள்ளன. அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைவதில் இழுபறி நீடித்து வருகிறது. இதனிடையே சமீபத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “விஜயகாந்த் நல்ல ஆரோக்கியத்துடன் மக்கள் தொண்டாற்ற வேண்டும். அவரிடம் உடல் நலம் பற்றி மட்டும் விசாரித்தேன். அவரை மனிதாபிமான உணர்வோடுதான் சந்தித்தேன். நீங்கள் நினைப்பது போல எதுவும் பேசவில்லை'' என்றார். பின்னர், ’உங்கள் கூட்டணிக்கு தேமுதிக வந்தால் ஏற்பீர்களா?’ என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘ உங்கள் நல்ல எண்ணத்துக்கு நன்றி’ என்றார்.

இந்நிலையில் சென்னையில் இன்று தேமுதிக மாவட்ட செயலாளர்களுடன் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,“ தேமுதிகவுடன் கூட்டணி வைக்க தமிழகத்தில் உள்ள பெரிய கட்சிகள் முயற்சித்து வருகின்றன. தேமுதிக பலம் எங்களுக்கு தெரியும். கடந்த தேர்தலை வைத்து விவாதம் செய்யக்கூடாது. எங்கள் பலத்திற்குரிய கௌரவமான இடம் வழங்குபவர்களுடன் கூட்டணி அமையும். எந்த கட்சியுடன் கூட்டணி என்பது இதுவரை முடிவு செய்யப்படவில்லை. விஜயகாந்த் உரிய முடிவை அறிவிப்பார். விஜயகாந்த்- மு.க.ஸ்டாலின் சந்திப்பில் உடல்நலம் பற்றி மட்டுமே பேசப்படவில்லை. அனைத்து விஷயங்களும் பேசப்பட்டது. விஜயகாந்த்தை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்ததற்கு தேமுதிக சார்பில் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். தமிழகத்தில் 3-வது அணி உருவாக வாய்ப்பில்லை.” என்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close