[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 6 மணிக்குள் வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் கெடு விதித்துள்ளார்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

திமுக கூட்டணியில் தேமுதிக..? திருநாவுக்கரசர் சூசகம்..!

thirunavukkarasar-press-meet

தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து நலம் விசாரித்ததோடு, அரசியல் பற்றியும் பேசியதாக திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கூட்டணி பேச்சுவார்த்தையில் அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகளும், பாஜகவிற்கு 5 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேசமயம் 2 கட்சிகளும் அதற்குப் பின் நடைபெற இருக்கும் 21 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பார்கள் என கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இதனிடையே அதிமுக கூட்டணியில் இணைய தேமுதிக 10 தொகுதிகளை கேட்பதாக சொல்லப்படுகிறது. இதனை ஏற்க மறுக்கும் அதிமுக, 10 தொகுதிகளை தேமுதிகவிற்கு ஒதுக்கும்பட்சத்தில், தேமுதிக வேட்பாளர்களும் அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று கோரிக்கை வைப்பதாக கூறப்படுகிறது. இதனால் கூட்டணி பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாமல் இழுபறி நீடிக்கிறது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான திருநாவுக்கரசர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்திக்க சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், விஜயகாந்த்தின் நலம் குறித்து விசாரிக்க செல்வதாக தெரிவித்தார். காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள நிலையில், திருநாவுக்கரசர் விஜயகாந்தை சந்திக்க இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜயகாந்த் உடனான சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், விஜயகாந்தை சந்தித்து நலம் விசாரித்ததோடு, அரசியல் பற்றியும் பேசியதாக கூறினார். நாட்டின நலன் கருதி நல்ல முடிவு எடுக்க விஜயகாந்தை கேட்டுக்கொண்டுதாகவும் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close