[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலையொட்டி சென்னையில் 113 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு
  • BREAKING-NEWS விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் அறிவித்தபடி ரூ.6ஆயிரம் 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது
  • BREAKING-NEWS ஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா பிறந்தநாளான வரும் 24ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி
  • BREAKING-NEWS 21 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அதிமுகவுக்கு பாஜக முழு ஆதரவு அளிப்பதாக தீர்மானம் - பியூஷ் கோயல், துணைமுதல்வர் ஓபிஎஸ் கூட்டாக பேட்டி
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானது; அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கான திமுக-காங்கிரஸ் கூட்டணி நாளை அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்

தமிழகத்தில் இதுவரை பாஜக அமைத்த கூட்டணி பயணம்

the-bjp-led-alliance-has-so-far-in-tamil-nadu

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக - பாஜக இடையிலான கூட்டணி இறுதியாகி இருப்பதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படும் நிலையில், இதற்கு முன்பு தமிழகத்தில் பாஜக எந்தெந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தது என்பதை பார்க்கலாம்.

1998ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில்தான் பாரதிய ஜனதா கட்சி முதன்முறையாக தமிழகத்தில் ஒரு திராவிட கட்சியுடன் கூட்டணி அமைத்தது. 1998 பொதுத்தேர்தலை பெரிய கூட்டணியுடன் எதிர்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. இந்தக் கூட்டணியில் பாஜகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டு, 3 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் ஓராண்டு கூட இது நீடிக்கவில்லை. 

மத்தியில் வாஜ்பாய் அரசுக்கான ஆதரவை அதிமுக திரும்ப பெற்றதால் ஆட்சி கவிழ்ந்தது. தொடர்ந்து 1999ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற்றது. இந்த முறை திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே கூட்டணி ஏற்பட்டது. 6 இடங்கள் ஒதுக்கப்பட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றது. 2004ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் வருவதற்கு சில மாதங்களுக்கு முன்பாக திமுக - பாஜக கூட்டணி முறிந்தது. 

2004ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்தன. ஆனால் இந்த அணிக்கு படுதோல்வியே கிடைத்தது.

இதன் பிறகு 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜகவுடன் மதிமுக, தேமுதிக, இந்திய ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்தன. அதில் ஒரு இடத்தில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது.

இந்நிலையில், 2019 நாடாளுமன்றத்தேர்தலில் மீண்டும் பாஜக - அதிமுக கூட்டணி அமைய உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close