[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்
  • BREAKING-NEWS கோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

கே.எஸ்.அழகிரிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

mk-stalin-wish-tn-new-congress-president-ks-alagiri

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் கே.எஸ்.அழகிரிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவராக கே.எஸ்.அழகிரியை நியமித்து கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.மேலும், தமிழக காங்கிரஸ் செயல்தலைவர்களாக ஹெச்.வசந்தகுமார்,கே.ஜெயக்குமார், விஷ்ணுபிரசாத், மயூரா ஜெயக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

Image result for ks alagiri

இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் கே.எஸ்.அழகிரிக்கும், தமிழக காங்கிரசின் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்ட நால்வருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்“தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  கே.எஸ். அழகிரிக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இதயப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

Related image

“தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்துடன் பணியாற்றுவேன்”என்று அவர் பத்திரிகையாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியை வரவேற்று, தமிழக காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் அவர் மென்மேலும் சிறப்புடன் பணிபுரிய வேண்டுமென வாழ்த்தி, அவருடன் இணைந்து பணியாற்ற தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ள எச்.வசந்த்குமார், எம்.எல்.ஏ., கே.ஜெயக்குமார், எம்.கே.விஷ்ணுபிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close