[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழும் தமிழ்நாடும் மனதுக்கு நெருக்கமானவை என எப்போதும் சொல்வேன்; நாட்டில் மிக அழகான மாநிலம் தமிழ்நாடு - உலக முதலீட்டாளர் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு
  • BREAKING-NEWS மத்திய மாநில அரசுகள் இடையே ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்புமே வளர்ச்சி தரும் - துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு
  • BREAKING-NEWS குக்கர் சின்னத்தை உச்சநீதிமன்றம் அளிக்கும் என உறுதியாக நம்புகிறோம் - வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன்
  • BREAKING-NEWS Videocon நிறுவனத்துக்கு கடன் வழங்கிய விவகாரத்தில் ஐ.சி.ஐ.சி.ஐயின் முன்னாள் தலைவர் சாந்தா கோச்சார் மீது சிபிஐ வழக்கு பதிவு
  • BREAKING-NEWS ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித்துறை அரசாணை
  • BREAKING-NEWS பிரதமர் மோடியும், அவரது சகாக்களும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மலரப்போகின்ற அரசு மாநில சுயாட்சியை உறுதி செய்யும் அரசாக அமையும் - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு

காங்கிரஸ் கூட்டத்தில் மோதல் : 7 பேர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்

7-congress-party-members-sacked-after-choas-in-its-sathyamoorti-bhavan-meeting

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய மேலிடப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சஞ்சய்தத், சென்னை வந்துள்ளார். அவரது தலைமையில் கட்சியின் மாவட்ட தலைவர்கள், அனைத்துப் பிரிவு தலைவர்கள் மற்றும் முன்னாள் தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

எதிர்வரும் தேர்தல்களுக்கான ஏற்பாடுகள், வெற்றிபெறும் வியூகங்கள் உள்ளிட்டவை குறித்து நடைபெற்றுக் கொண்டிருந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கு பெற அனுமதிக்குமாறு 20-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் நுழைவு வாயிலில் இருந்தவர்களிடம் கேட்டனர். அழைப்பு உள்ளவர்களை தவிர மற்றவர்களுக்கு அனுமதி இல்லை என திட்டவட்டமாக கூறப்பட்டதால், இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 

தகவலறிந்து வந்த தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், இரு பிரிவினரையும் சமாதானம் செய்து வைத்தார். புதிய மேலிடப் பொறுப்பாளரான சஞ்சய்தத், அலுவலகத்தில் இருந்தபோதே நடைபெற்ற இச்சம்பவத்தால் சலசலப்பு ஏற்பட்டது.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், “அழைப்பில்லாமல் வந்தவர்கள் தான் வெளியேற்றப்பட்டனர். எந்த பிரச்னையும் இல்லை” என்றார். 

அதேபோல், தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் மாநிலத் தலைவர், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கூறுகையில், “கோஷ்டி மோதல் ஏதுமில்லை. நீண்ட நாட்களுக்கு பின்னர் கட்சியினர் ஒன்றாக பார்த்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. கட்சியினர் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். ஒருவரை ஒருவர் கை குலுக்கி கொண்டனர்” என்றார். 

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடர்பாக 7 பேரை கட்சியில் இருந்து அதன் தலைவர் திருநாவுக்கரசர் நீக்கியுள்ளார். முரளிதரன், சீனிவாசமூர்த்தி
, கடல் தமிழ்வாணன், வில்லிவாக்கம் ஜான்சன், ஏ.வி.எம்.ஷெரிப்,  பொன் மனோகரன், திருவொற்றியூர் பாஸ்கர் உள்ளிட்டோர்  நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளனர்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close