[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ.600 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு
  • BREAKING-NEWS இரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்
  • BREAKING-NEWS கேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்
  • BREAKING-NEWS 18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS கேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு
  • BREAKING-NEWS டெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது

சட்டப்பேரவை இடைத்தேர்தல்கள் - பாரதிய ஜனதாவுக்கு பின்னடைவு

bypoll-results-bjp-wins-in-maharashtras-palghar-suffers-setback-in-ups-kairana

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற 11 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல்களில் பாரதிய ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் செங்கண்ணூர், மகாராஷ்டிராவில் பாலஸ் காடேகான், ஜார்க்கண்டில் சில்லி, கோமியா, பீகாரில் ஜோகிஹாட், மேகாலயாவில் அம்பாட்டி, மேற்கு வங்கத்தில் மஹேஷ்தலா, உத்தரப் பிரதேசத்தில் நூர்பூர், பஞ்சாப்பின் ஷாக்கோட், உத்தரகாண்டில் தாராலி ஆகிய 11 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 

இதில், நூர்பூர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றார். பீகார் மாநிலத்தின் ஜோகிஹாட் தொகுதியில் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் வெற்றி பெற்றுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் கோமியா மற்றும் சில்லி ஆகிய தொகுதிகளில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா வெற்றி பெற்றுள்ளது. கேரளாவில் செங்கண்ணூர் தொகுதியில் ஆளும் மார்க்சிஸ்ட் வேட்பாளர் சாஜி செரியன் வெற்றி பெற்றார். 

மேகாலயாவில் அம்பாட்டி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மைனி டி ஷிரா வெற்றி பெற்றுள்ளார். மேற்குவங்கத்தில் மஹேஷ்தலா தொகுதியில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் துலால் சந்திரா வெற்றி பெற்றார். உத்தரகாண்டில் தாராலியில் மட்டும் ஆயிரத்து 900 வாக்குகள் வித்தியாசத்தில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றது. சட்டப்பேரவை இடைத்தேர்தலில் இதன்மூலம் பாரதிய ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

            

இதனிடையே, பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற 4 மக்களவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பா.ஜ.க.வும், காங்கிரசும் சம அளவில் வெற்றி பெற்றுள்ளன.

நாகலாந்து, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காலியாக இருந்த 4 மக்களவைத் தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் இடைத்தேர்தல் நடைபெற்று இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. உத்தரப் பிரதேச மாநிலம் கைரானா மக்களவைத் தொகுதியில் ராஷ்ட்ரிய லோக் தள கட்சியின் வேட்பாளர் தபஸூம் ஹசன் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் மிருங்கா சிங்கை 40ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ராஷ்ட்ரிய லோக் தளம் வெற்றி பெற்றுள்ளது. 

            

மகாராஷ்டிரா மாநிலம் பால்கார் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. அதே மாநிலத்தில் பண்டாரா கோண்டியா மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற்றார். நாகலாந்தில் நடைபெற்ற மக்களவைத் இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா இடம்பெற்றுள்ள தேசியவாத ஜனநாயக முன்னேற்ற முன்னணி வேட்பாளர், நாகா மக்கள் முன்னணி வேட்பாளரை தோற்கடித்தார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close