[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு
  • BREAKING-NEWS கொச்சி விமான நிலையம் மூடல்
  • BREAKING-NEWS வரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார்
  • BREAKING-NEWS இந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்
  • BREAKING-NEWS இன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு
  • BREAKING-NEWS மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS சென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி

“அமைச்சரவையை கூட்டி ஸ்டெர்லைட்டை மூட அரசாணை வெளியிடுங்கள்” - திமுக

get-the-cabinet-to-push-to-close-the-sterile-dmk

அமைச்சரவையை கூட்டி கொள்கை முடிவு எடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடும்  அரசாணையை பிறப்பிக்கும் வரை சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணிப்பதாக திமுக அறிவித்துள்ளது.

சென்னையில் உள்ள கலைஞர் அரங்கத்தில், மாதிரி சட்டப்பேரவைக் கூட்டத்தை திமுக மற்றும் அதன் தோழமைக்கட்சிகள் அறிவித்து இன்று நடத்தின. இந்த மாதிரி சட்டப்பேரவைக் கூட்டத்தில் திமுக கொறடா சக்கரபாணி அவைத் தலைவராக பதவி வகிக்க, பேரவையைப் போல் இங்கும் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்தார். கூட்டத்தில் திமுக எம்.எல்.ஏ.க்களுடன், காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. அபுபக்கர் மற்றும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருணாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

மாதிரி பேரவைக் கூட்டத்தில் 2 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன. முதலில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். ஸ்டாலின், துரைமுருகன், ஐ.பெரியசாமி, கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்களும், காங்கிரஸ் சார்பில் கே.ஆர்.ராமசாமி, வசந்தகுமார், விஜயதாரணி ஆகியோரும் பேசினர். நடிகர் கருணாஸ் மற்றும் இந்தியன் முஸ்லிம் லீக் அபுபக்கரும் ஒத்திவைப்பு தீர்மானம் குறித்த விவாதத்தில் பங்கேற்றனர்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close