[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதிலாக சமஸ்கிருதப் பாடலா?: ஸ்டாலின் கண்டனம்

dmk-acting-leader-mk-stalin-condemned-that-sanskrit-invocation-song-at-iit-madras-event-attended-by-central-ministers

ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

சென்னை ஐஐடி கல்வி மையத்தில் மத்திய அமைச்சர்‌ நிதின் கட்கரி பங்கேற்ற விழாவில்‌ தமிழ்‌த்தாய் வாழ்த்து பாடலுக்கு பதிலாக சமஸ்கிருத பாடல் பாடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேசிய துறைமுக நீர்வழிப்பாதை கடற்கரை தொழில்நுட்பத்‌துறையை உருவாக்கு‌வது தொடர்பாக ஐஐடி கடல்சார் தொழில்நுட்பத்துறைக்கும், மத்திய கப்பல் போக்குவரத்து துறைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி தொடங்கும்போது, இரு மாணவர்களும், இரு மாணவியரும் ‌சமஸ்கிருதத்தில் கணபதி பாடலை பாடினர். நிகழ்ச்சி முடிந்த பிறகு அதே மாணவர்கள் தேசிய கீதம் பாடினர். தமிழகத்தில் மத்திய அமைச்சர் பங்கே‌ற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதிலாக, சமஸ்கிருத‌ பாடல் பாடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மீண்டும் ஒரு முறை அவமதிப்பு நிகழ்ந்துள்ளது கண்டனத்திற்குரியது என்று ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதற்கு மத்திய அரசு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து ஸ்டாலின் கூறுகையில், “தமிழ் மொழியையும், பண்பாட்டையும் அவமதிக்கும் வகையில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டுள்ளது. இனி இத்தகைய தவறுகள் நேராதிருக்க உறுதியளிக்க வேண்டும். இந்தியாவின் சிறப்பே வேற்றுமையில் ஒற்றுமை காணும் பன்முகத்தன்மைதான். பாஜகவின் 4 ஆண்டு கால ஆட்சியில் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகள் அலட்சியப்படுத்துவது தொடர்கிறது” என்று குற்றம்சாட்டினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close