[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

ஜனநாயக உரிமை மறுக்கப்படுகிறது: கைதுக்குப் பின் ஹெச்.ராஜா கருத்து

bjp-leader-h-raja-arrested-in-nagai-vanjiyur-who-tried-to-protest-against-vck

நாகையில் போராட்டம் நடத்த முயன்ற ஹெச்.ராஜாவை வஞ்சியூரில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

அம்பேத்கர் நினைவு நாள் கூட்டத்தில் பேசிய திருமாவளவன், “இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான சிவன் கோயில்களும் பெருமாள் கோயில்களும், பவுத்த விகார்களையும் சமண கோயில்களையும் இடித்து விட்டுத்தான் கட்டி இருக்கிறார்கள். ஒரு வாதத்திற்கு கேட்கிறேன். சிவன் கோயில்கள், பெருமாள் கோயில்கள் இருக்கும் இடமெல்லாம் பவுத்த விகார்கள் கட்ட தயாரா?” என்று பேசினார். 

இதனையடுத்து, இந்துக்கோயில்களை இடிக்க வேண்டும் என திருமாவளவன் பேசியதாக கூறி பாஜகவினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சீர்காழியில் டிசம்பர் 11-ம் தேதி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாஜகவினர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கல்வீசி தாக்குதலில் நடத்தியதாக கூறப்படுகிறது. கல்வீச்சு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்த போலீசார், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 21 பேரை கைது செய்தனர்.

            

இந்நிலையில், சீர்காழியில் பாஜகவினர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்குதல் நடத்தியதை கண்டித்து நாகையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்தனர். ஆனால், பாஜகவினரின் ஆர்ப்பாட்டத்திற்கு நாகை போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். 

அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், நாகை வாஞ்சியூர் பகுதியில் போராட்டம் நடத்த ஹெச்.ராஜா உள்ளிட்ட பாஜகவினர் திரண்டனர். ஹெச்.ராஜாவின் வருகைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடிக் காட்ட முயன்றனர். பதற்றமான சூழல் ஏற்பட்டதால், அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டம் நடத்த வந்த ஹெச்.ராஜாவை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால், காவல்துறையினர், பாஜகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஹெச்.ராஜா உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.

        

கைதான பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, “நகையில் பாஜகவினர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்குதல் நடத்தினர். இதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த நாகை காவல்துறையினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். ஜவாஹிருல்லா, திருமாவளவன் ஆகிய வன்முறை சக்திகளுக்கு பயந்து காவல்துறை தொடை நடுங்கிளாக உள்ளனர். ஜனநாயக உரிமையை மறுக்கப்பட்டதை பாஜக வன்மையாக கண்டிக்கிறது” என்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close