[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரே சமயத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்த மோடி அரசு முடிவு
  • BREAKING-NEWS மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையாக மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000 வழங்கப்படும்- தமிழக அரசு
  • BREAKING-NEWS நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை முதல்வர் பழனிசாமி எதிரொலிக்கவில்லை- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்படும்- அமைச்சர் கே.பி.அன்பழகன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS தமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி

ராகுலுக்கு வாழ்த்து: காங். பக்கம் சாய்கிறாரா டிடிவி தினகரன்?

dhinakaran-greets-rahul-gandhi-on-elevation-as-cong-president

ராகுல் காந்திக்கு டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளதன் மூலம் அவர் காங்கிரஸ் பக்கம் சாய்கிறாரா? என்று சமூக வலைதளங்களில் விவாதிக்கப்படுகிறது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி போட்டியின்றி தேர்வாகியுள்ளார். இவரை எதிர்த்து ஒருவரும் போட்டியிடாததால் ராகுல் காங்கிரஸ் தலைவாரக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். 47 வயதான ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவராக வரும் 16ஆம் தேதி ராகுல் பொறுப்பேற்கிறார். இதுவரை இருந்த தலைவர்களிலேயே ராகுல் காந்திதான் இளம் வயதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக தேர்வாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 132 ஆண்டு வரலாற்றுடன் இந்தியாவின் பழமையான கட்சியாக திகழும் காங்கிரஸ் கட்சிக்கு சோனியா காந்தி கடந்த 19 ஆண்டுகளாக தலைமை வகித்து வந்தார். இதன்மூலம் காங்கிரஸ் கட்சிக்கு தொடர்ந்து அதிக காலம் தலைவராக இருந்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் சோனியா காந்தி.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவராக தேர்வாகியுள்ள ராகுல்காந்திக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “போட்டியின்றி காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள உங்களுக்கு எனது வாழ்த்துகள். நூற்றாண்டு கடந்த காங்கிரஸ் கட்சியின் முன்னோடி தலைவர்களின் பாதையில் நீங்கள் மேலும் சிறப்பாக செயல்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். பாஜக உடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் டிடிவி தினகரன், ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதன் மூலம் காங்கிரஸ் பக்கம் சாய்ந்துவிட்டாரா என சமூக வலைதளங்களில் பலர் விவாதித்து வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close