[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வீடியோ கேம் ஒரு மன நோய்: பெற்றோருக்கு எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஒகேனக்கல்லில் பரிசல்கள் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் 3ஆம் நாளாக தடை
  • BREAKING-NEWS கோவை குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல 9ஆம் நாளாக வனத்துறை தடை விதிப்பு
  • BREAKING-NEWS திருப்பதி அருகே வனப்பகுதியில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்
  • BREAKING-NEWS சுங்கச்சாவடி தாக்குதல், என்.எல்.சி முற்றுகை போராட்ட வழக்கில் வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமீன்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத அனுமதிக்கப்படும்- மத்திய அமைச்சர் ஜவடேகர்
  • BREAKING-NEWS ஜூலை 12 இல் எஸ்.வி.சேகர் ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும்- நெல்லை நீதிமன்றம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: தமாகா போட்டியிடவில்லை என வாசன் அறிவிப்பு

rk-nagar-byelection-tmc-not-contest

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தமிழ்மாநில காங்கிரஸ் போட்டியிடவில்லை என அந்த கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் கடந்தமுறை போட்டியிட்ட மருதுகணேஷையே மீண்டும் வேட்பாளராக திமுக அறிவித்துள்ளது. திமுகவிற்கு, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன. அதிமுக சார்பில் இன்னும் வேட்பாளர் தேர்வு செய்யப்படவில்லை. தேமுதிக போட்டியிடவில்லை. பாரதிய ஜனதா பிரபலமானவரையே வேட்பாளாராக அறிவிக்கவுள்ளதாக கூறியுள்ளது.

இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தமிழ்மாநில காங்கிரஸ் போட்டியிடவில்லை என அந்த கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீதிமன்ற உத்தரவின் பேரிலேயே இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களத்தில் ஒதுங்கி நிற்க தமாகா முடிவெடுத்துள்ளதாகவும் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close