[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்
  • BREAKING-NEWS நெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
  • BREAKING-NEWS ஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சம்- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா
  • BREAKING-NEWS தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை எம்.பி

ஒற்றுமையோடு ஆர்.கே.நகரில் வெற்றி பெறுவோம்: ஓ.பி.எஸ்

we-will-win-in-rk-nagar-like-two-leaves-symbol-we-get-said-ops

அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நின்ற காரணத்தால்தான் இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெற்றிருப்பதாகவும், அதே ஒற்றுமையோடு ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெறுவோம் எனத் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் வழியில் நடத்திக்கொண்டிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, திட்டங்களை எல்லாம் சிறப்புடன் செயல்படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார். ஜெயலலிதா சொன்னபடி அனைவரும் ஒன்றுபட்டு நின்ற காரணத்தினால்தான் இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெற்றிருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இதே ஒற்றுமையோடும், தமிழக மக்களின் அன்பான ஆதரவோடும், அடுத்த மாதம் சந்திக்க இருக்கும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்று, ஜெயலலிதாவுக்கு சமர்ப்பணம் செய்வோம் என தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் எண்ணத்தை நிறைவேற்றுகிற வகையில் அவரின் ஆட்சியை, தொடர்ந்து தமிழகத்தில் பீடுநடை போடச் செய்திடுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close