[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திருவாரூர்: கருப்பூரில் பாமாயில் நிறுவனத்தின் எண்ணெய் கழிவுகள் பாசன வாய்க்காலில் கலந்தன
  • BREAKING-NEWS சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த தல்வீர் பண்டாரி 2வது முறையாக தேர்வு
  • BREAKING-NEWS ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிகள் இணைந்து மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?- மைத்ரேயன்
  • BREAKING-NEWS புதுச்சேரியில் 4வது நாளாக அரசுப்பேருந்துகளை இயக்காமல் ஊழியர்கள் போராட்டம்
  • BREAKING-NEWS முதலமைச்சரின் ஆணைப்படி வைகை அணையில் இருந்து வினாடிக்கு 900 கனஅடி நீர் திறப்பு
  • BREAKING-NEWS அரசு இருக்கும்போது ஆளுநர் ஆய்வு செய்வது சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் புறம்பானது - முத்தரசன்
  • BREAKING-NEWS இன்றைய அரசியல் சூழலில் சட்டப்பேரவையை கூட்ட முதல்வர் தயாரா?: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS கோவையில் ஆய்வு மேற்கொண்டது போன்ற பணிகள் தொடரும்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் உட்பட 7 வழக்குகளின் விசாரணை 24ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு: சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS பத்மாவதி திரைப்படத்தில் சில காட்சிகளை நீக்கக் கோரிய மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS கார்த்தி சிதம்பரம் டிச.1ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS எல்லைதாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 11 பேர் விடுவிப்பு
  • BREAKING-NEWS புதிய வரைவு பாடத்திட்டங்கள் பள்ளிக்கல்வித்துறையின் http://www.tnscert.org தளத்தில் வெளியீடு
  • BREAKING-NEWS தாஜ்மஹாலை பராமரிப்பதில் ஏன் உத்தரபிரதேச அரசு தொய்வுடன் செயல்படுகிறது- உச்சநீதிமன்றம்
அரசியல் 05 Nov, 2017 10:08 AM

ஜனநாயக சக்தியுடன் இணைந்து மதவாதத்தை எதிர்க்கிறோம்: திருமாவளவன்

thirumavalavan-about-religion-politics

இந்து வலது சாரியினரும் வன்முறையில் ஈடுபட ஆரம்பித்துவிட்டதாகவும், இந்துத் தீவிரவாதி ஒருவரை காட்டுங்கள் என இனி அவர்கள் சவால் விட முடியாது என்றும் கமல்ஹாசன் வார இதழ் ஒன்றில் எழுதியிருந்தார். இந்தக் கருத்துக்கு தீவிர வலதுசாரி அமைப்பான இந்து மகாசபா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கமல்ஹாசனையும் அவர் போன்று பேசுபவர்களையும் சுட்டுக்கொல்ல வேண்டும் என்று இந்துமகாசபை துணைத் தலைவர் அசோக் சர்மா கடுமையாகச் சாடியுள்ளார்.

இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கமலின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆட்சிக்கு வரவேண்டும் என்று துடிக்கிற நேரத்திலேயே இவ்வளவு வன்முறை வெறியாட்டத்தை கையில் எடுப்பவர்கள், தமிழகத்தில் ஒரு சக்தி வளர்ந்து விட்டால், ஆட்சியை கைப்பற்றக்கூடிய நிலையை எட்டிவிட்டால் அல்லது ஆட்சியையே கைப்பற்றிவிட்டால் தமிழ்நாடு என்ன ஆகும்? எனவே சாதிய மதவாத சக்திகள் தமிழகத்தில் வலுப்பெற்றுவிடக்கூடாது. அவர்கள் தமிழகத்தில் காலூன்றிவிடக்கூடாது என்பதன் அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள், ஜனநாயக சக்திகளுடன் இணைந்து போராடிக்கொண்டிருக்கிறோம். இதனால் நடிகர் கமல்ஹாசன் இந்துத் தீவிரவாதத்தை சுட்டிக்காட்டியுள்ளதை வரவேற்கிறேன்.” என்று கூறினார். 

Advertisement:
Related Tags : ThirumavalavanReligion politics
Advertisement:
Advertisement:
[X] Close