[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

டெங்கு குறித்து வெள்ளை அறிக்கை தேவை: திருமாவளவன் ஆர்ப்பாட்டம்

vck-leader-thirumavalavan-slams-tn-govt-on-dengue-issue

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்கக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் டெங்குவை கட்டுப்படுத்தும் பணிகளில் மாநில அரசுடன் சேர்ந்து மத்திய அரசும் ஈடுபட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் முழக்கமிட்டனர். டெங்குவால் உயிரிழவர்களின் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், டெங்கு தடுப்பு நடவடிக்கை போதுமானதாக இல்லை என்று கூறினார். டெங்குவை கட்டுப்படுத்த மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு போதிய நிதியை கேட்டுப்பெற வேண்டும் என்றும், டெங்கு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் திருமாவளவன் வலியுறுத்தினார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close