[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தி.மலையில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS வட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என மக்களிடம் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்

தமிழர்களின் பெருமையை மத்திய அரசு மறைக்க முயற்சிக்கிறது: முத்தரசன்

cpi-mutharasan-about-keeladi

தமிழர்களின் பெருமைகளை மறைக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "கீழடியின் மூலம் தமிழர்களின் பெருமைகள் வெளிவந்து விடக்கூடாது என்ற உள்நோக்கத்தோடு, ‘கல்யாண வீட்டில் சீப்பை ஒழித்து வைப்பதுபோல்’ ஒரு தவறான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டிருக்கிறது. இதனைக் கண்டிக்கும் போதேல்லாம், தமிழகத்தில் உள்ள பாஜக தலைவர்கள் கீழடி அகழ்வாராய்ச்சிக்கு நாங்கள் தடையாக இல்லை என்றும், அந்த ஆய்வை தொடர்ந்து மேற்கொள்வோம் என்றும் விளக்கமளிக்கின்றனர். ஆனால் மத்திய அரசிடம் கீழடி அகழ்வாராய்ச்சியை தொடர்ந்து நடத்தவேண்டும் என்று மாநில பாஜகவினர் கோரிக்கை விடுக்கமாட்டார்கள். இருப்பினும் நாங்கள் தொடர்ந்து கீழடி ஆய்வை நடத்துவதற்கான முயற்சியை மேற்கொள்வோம்.” என்று கூறினார்.
 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close