[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வேலைக்குச் செல்லும் பெண்கள் பத்திரமாக வீடு திரும்ப முடியாத நிலை உள்ளது - கனிமொழி
  • BREAKING-NEWS காவிரி பிரச்னையில் தமிழக உரிமை நிலைநாட்டப்படும் - அமைச்சர் உதயகுமார்
  • BREAKING-NEWS நியூட்ரினோ திட்டத்துக்கான மத்திய சுற்றுச் சூழல்துறை அனுமதியை எதிர்த்து டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS விருதுநகர்: அருப்புக்கோட்டையில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவி வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை
  • BREAKING-NEWS வன்கொடுமை சட்டத்தில் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சென்னையில் 200 க்கும் மேற்பட்டோர் பேரணி
  • BREAKING-NEWS தமிழத்தில் எல்லாவித தூசிகளும் தட்டப்பட்டு காணாமல்போன குப்பை விஜயகாந்த்- அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS செம்பரபாக்கம் ஏரிக்கு திறக்கப்படும் நீரின் அளவு 443 கன அடியில் இருந்து 593 கன அடியாக அதிகரிப்பு

தமிழிசைக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: மு.க.ஸ்டாலின்

no-need-to-answer-tamilisai-mk-stalin

திமுக பற்றி முரண்பாடாக பேசி வரும் தமிழிசை சவுந்தரராஜனுக்கு எல்லாம், தாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும், தமிழகத்தில் டெங்கு ஆட்சி நடைபெறுவதாகவும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், " திமுக பற்றி தமிழிசை எப்போதும் முரண்பாடாகத் தான் கருத்து தெரிவித்துக் கொண்டிருப்பார். அதற்கெல்லாம் பதில் சொல்லி விளக்கத் தயாராக இல்லை. கெயில் திட்டமாக இருந்தாலும் எந்த திட்டமாக இருந்தாலும், விவசாய நிலம் பாதிக்கப்படக் கூடாது என்கிற நிலையில் தான் கொண்டுவர வேண்டும். ஏற்கனவே திமுகவின்  அறிக்கையில் இது சொல்லப்பட்டுள்ளது. கருணாநிதியும் அதனைத்தான் கூறியுள்ளார். என்னவென்றால், மெயின் ரோட்டில், சாலையில் கொண்டுவருவதை வரவேற்கிறோம். மத்திய அரசு மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும். தமிழகத்தில் டெங்கு ஆட்சி தான் நடைபெற்று வருகிறது " என்றார்.

திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கெயில் திட்டத்தை எதிர்த்துப் போராடுவோம் என்று திமுக இப்போது அறிவிப்பது முரண்பாடானது என்று பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close