[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை

டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் தகுதியிழந்தால், எடப்பாடிக்கு சாதகம்!

uttarkhand-example-in-tamilnadu

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதியிழப்பு செய்யப்படும் பட்சத்தில் அது ஆளும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு சாதகமாக முடியும் எனக் கூறப்படுகிறது. இதற்கு கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் உத்தராகண்டில் நடைபெற்ற நிகழ்வு உதாரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது

உத்தராகண்ட் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 9 பேர் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவளித்ததால் அவர்களை தகுதி நீக்குவதாக சபாநாயகர் கோவிந்த் சிங் குஞ்ச்வால் கடந்த மார்ச் மாதம் அறிவித்தார். 

இதையடுத்து முதலமைச்சர் ஹரீஷ் ராவத் பேரவையில் நடத்த‌விருந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தகுதியிழப்பு செய்யப்பட்ட 9 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் பங்கேற்க முடியுமா என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பான வழக்கில் உத்தராகண்ட் உயர் நீதிமன்‌றம் மற்றும் உச்ச நீதிமன்றம் இரண்டுமே தகுதிய நீக்கப்பட்ட 9 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க முடியாது என உத்தரவிட்டன. இதையடுத்து‌ ஹரீஷ் ராவத் அரசு பெரும்பான்மையை நிரூபித்தது. இந்த தீர்ப்பை மேற்கோள் காட்டி எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும் என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close