தமிழகத்தில் கெயில் எரிவாயு திட்டத்தை செயல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கெய்ல் நிறுவனம், எரிவாயு குழாய்கள் பதிப்பதற்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய்களைப் பதிக்க, எந்தத் தடையும் கிடையாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் எரிவாயு குழாய் பதிக்கும் பாதையை மாற்ற, தமிழக அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கெயில் எரிவாயு திட்டம் வரையறுக்கப்பட்டபோதே , தமிழக அரசு எதிர்க்காதது ஏன் என நீதிபதிகள் வினவினர். இந்த திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டத்திற்குப் பிறகு, வாக்கு வங்கியை கருத்தில்கொண்டு தமிழக அரசு செயல்படுகிறதா என்றும் கேள்வி எழுப்பினர். எரிவாயு குழாய் பதிக்கப்படும் விளைநிலங்களில், தற்போதைய சந்தை விலையை கருத்தில் கொண்டு, விவசாயிகளுக்கு 40 சதவிகித இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
"அறியாமல் புலம்பும் கமல் சாருக்கு சமர்ப்பணம்" ட்விட்டரில் பதிலடி கொடுத்த உதயநிதி
பாதுகாப்பு படை வீரர்களை வான்வழியாக அழைத்துச் செல்ல மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல்
“ காகமும் யோகாவும்” சர்ச்சைக்குள்ளான கிரண் பேடியின் ட்விட்டர் பதிவு
மொகாலி மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த பாக் கிரிக்கெட் வீரர்கள் புகைப்படங்கள் நீக்கம் !
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் தடை...!