[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கஜா புயல் பாதிப்புக்கு பிரதமரை சந்தித்து நிவாரண நிதி கோர டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS ஓசூர் அருகே தம்பதி ஆணவக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சூடுகொண்டப்பள்ளியில் நந்தீஷ் பெற்றோரிடம் எஸ்.சி., எஸ்.டி ஆணைய துணைத்தலைவர் முருகன் விசாரணை
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

டெல்லியில் துப்புரவு பணியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள்

aap-ministers-use-brooms-in-delhi-sanitation-workers-block-clean-up-team

டெல்லியில் துப்புரவு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் அம்மாநில அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் தெருக்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் துப்பரவுப் பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இதனால் நகரின் பல பகுதிகளில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன.

இதைத் தொடர்ந்து ஆளும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் துப்பரவுப் பணிகளில் ஈடுபட்டனர். ஆம் ஆத்மிக் கட்சித் தொண்டர்களும் பொதுப்பணித்துறை உள்ளிட்ட பிற துறை அதிகாரிகளும் ‌துப்புரவுப் பணிகளை மேற்கொண்டனர்.

அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் துப்புரவுப் பணியில் ஈடுபட்டதை டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் பாராட்டியுள்ளார். அவர் தற்போது பெங்களூருவில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close