காதலிக்க மறுத்த இளைஞர் மீது ஆசிட் வீசியதாக இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒடிசா மாநிலம் கட்டாக் அருகில் உள்ள ஜகட்புரைச் சேர்ந்தவர் அலேக் பரிக். இவர் நேற்று முன்தினம் இரவு, பக்ரி சஹி என்ற இடத்தில் இளம் பெண் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார். சில நிமிடங்களில் அவரது அலறல் சத்தம் கேட்டதை அடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது கீழே விழுந்து கிடந்த பக்ரி, தன் மீது இளம் பெண் ஆசிட் வீசியதைக் கூறி கதறினார். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், பக்ரியிடம் விசாரணை நடத்தினர். அவர், தன்னை அந்தப் பெண் காதலித்ததாகவும் தனக்கு அவர் மீது காதல் இல்லை என்றதால் ஆத்திரத்தில் ஆசிட் வீசியதாகவும் தெரிவித்தார்.
ஆனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர், இருவரும் காதலித்து வந்ததாகவும் அதனால் ஏற்பட்ட பிரச்னை காரணமாக ஆசிட் வீசப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
உலகின் சக்திவாய்ந்த பெண்கள்: நிர்மலா சீதாராமனுக்கு இடம்..!
ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி
ஜில்.. கிரேட்டா! ஜில்!! - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட்!
பப்ஜி ஆர்வத்தில் தண்ணீருக்கு பதிலாக கெமிக்கலைக் குடித்த இளைஞர் உயிரிழப்பு!
3 குழந்தைகளை கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை: லாட்டரி சீட்டே காரணம் என மரண வாக்குமூலம்..!