[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய அரசு நல்லது செய்தால் அதை ஆதரிப்போம்; மக்களுக்கு எதிராக எது இருந்தாலும் அதை எதிர்ப்போம் - அமைச்சர் காமராஜ்
  • BREAKING-NEWS மேற்குவங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு முறை அமல்படுத்தப்படாது; இதற்கு எதிராக யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் - முதல்வர் மம்தா பானர்ஜி
  • BREAKING-NEWS மு.க.ஸ்டாலினை சந்தித்து தனக்கு வழங்கப்பட்ட சிறந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருக்கான விருதை காண்பித்து வாழ்த்துப்பெற்றார் திருச்சி சிவா
  • BREAKING-NEWS எனது விளக்கத்தை ஏற்று என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பிய கமலுக்கு நன்றி - ராகவா லாரன்ஸ்
  • BREAKING-NEWS என் பெயர் ராகுல் காந்தி; ராகுல் சவார்கர் அல்ல; உண்மையை பேசியதற்காக நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன் - ராகுல் காந்தி
  • BREAKING-NEWS நாட்டுக்காக மக்கள் குரல் எழுப்பாமல் அமைதியாக இருந்தால் அரசியலமைப்பு அழிக்கப்படும் - பிரியங்கா காந்தி
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 20ஆம் தேதிக்கு பின் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

மகாராஷ்டிரா வழக்கு: இன்று 10.30 மணிக்கு உத்தரவு

supreme-court-to-pronounce-order-today-maha-govt-formation

மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா அரசு அமைக்கப்‌பட்டதற்கு எதிரான வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் அவசர கதியில் ஆட்சி அமைக்கப்பட்டதற்கு எதிராக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. ஆட்சியமைப்பதற்கான ஆதரவு க‌டிதம், குடிய‌ரசுத் ‌தலைவர் ஆட்சியை திரும்பப் பெறுவற்கு அளித்த பரிந்துரை கடிதம் ஆகிய இரண்டும் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.

ஆளுநருக்கு தேவேந்திர ஃபட்னாவிஸ் அளித்த கடிதத்தில், தேசியவாத காங்கிரஸ் ஆதரவை குறிப்பிட்டுள்ளதாகவும் அதன் அடிப்படையில், ஆளுநர் ஆட்சியமைக்க அழைத்ததாகவும் ஆளுநரின் செயலர் தரப்பில் ஆஜரான துஷார் மேத்தா தெரிவித்தார். அப்போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உடனடியாகத் தயாரா என நீதிபதி சஞ்சீவ் கண்ணா கேள்வி எழுப்பினார். அதற்கு அவகாசம் தேவை என பாரதிய ஜனதா தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து வாதிட்ட சிவசேனா தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல், சிவசேனா கூட்டணி ஆட்சியமைப்பதைத் தடுக்கவே அவசரமாக ஆளுநர் முடிவெடுத்துள்ளார் என்றும் காலை 5.47 மணிக்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை நீக்கும் அளவுக்கு, இது அவசர நிலையா? எனவும் கேள்வி எழுப்பினார்.

தற்காலிக சபாநாயகரை நியமித்து, உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் தரப்பில் ஆஜரான அபிஷேக் மனு சிங்வி வாதிட்டார். கட்சி பேதமின்றி மூத்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவரை பேரவையின் தற்காலிகத் தலைவராக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

சிவசேனா, பாரதிய ஜனதா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் ஆளுநரின் செயலர் தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், வழக்கை நாளை(இன்றைய தேதி) காலை 10.30 மணிக்கு ஒத்திவைத்தனர். அப்போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பான உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close