[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெங்கு கொசு ஒழிப்புப் பணியில் மெத்தனம் காட்டியதாக 50 தற்காலிக பணியாளர்கள் டிஸ்மிஸ்: வேலூர் ஆட்சியர் நடவடிக்கை
  • BREAKING-NEWS ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கையின் முடிவை வரும் 22-ஆம் தேதி வரை வெளியிட தடை நீட்டிப்பு
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கில் நாளை காலை தீர்ப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு.
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்

அயோத்தி தீர்ப்பின்போது மக்கள் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

will-be-satisfactory-sri-sri-ravi-shankar-before-ayodhya-verdict

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகும்போது மக்கள் சுயக்கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் என வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கேட்டுக் கொண்டார்.

Image result for supreme court of india

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கின் தீர்ப்பு வரும் 13-ஆம் தேதி வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், தீர்ப்பு எதுவாக இருந்தாலும் மக்கள் சுயக்கட்டுப்பாட்டுடன் அமைதி காக்க வேண்டும் என வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கேட்டுக் கொண்டுள்ளார். தீர்ப்பு திருப்திகரமானதாக இருக்கும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

Image result for sri sri ravi shankar

அயோத்தி நிலம் உரிமை கோரும் வழக்கில், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா தலைமையிலான 3 பேர் கொண்ட மத்தியஸ்தர் குழுவில் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close