[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா
  • BREAKING-NEWS தமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை

“மத்திய அமைச்சரவையில் இருந்து விலகினால் கூட்டணி”: சிவசேனாவுக்கு என்சிபி நெருக்கடி?

ncp-sources-tell-that-ncp-will-ally-with-sena-if-they-quit-the-modi-cabinet-at-the-centre

மத்திய அமைச்சரவையில் இருந்து சிவசேனா கட்சி விலகி வந்தால் நாங்கள் கூட்டணி அமைக்க தயாராக உள்ளோம் என தேசியவாத காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்களுக்கும் மேல் ஆன நிலையில், ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. சிவசேனாவும் பாஜகவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் யார் ஆட்சி அமைப்பது? ஆட்சியில் யாருக்கு என்ன பங்கு? என்பது குறித்து பேச்சுவார்த்தை தொடர்ந்து கொண்டே உள்ளது. சிவசேனாவின் முதலமைச்சர் பதவி பகிர்வு ஒப்பந்தத்திற்கு பாஜக ஒத்துவராததால் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

இந்நிலையில் மத்திய அமைச்சரவையில் இருந்து சிவசேனா கட்சி விலகி வந்தால் நாங்கள் கூட்டணி அமைக்க தயாராக உள்ளோம் என தேசியவாத காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்படி சூழ்நிலை ஏற்பட்டால், மகாராஷ்டிரா முதலமைச்சராக தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு சிவசேனா கட்சியை சேர்ந்தவரே இருக்கலாம் எனக் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 24-ஆம் தேதி வெளியானது. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக 105 இடங்களிலும் சிவசேனா 56 இடங்களிலும் வெற்றிப் பெற்றது. தேர்தலில் இவ்விரு கட்சிகளும் கூட்டணி அமைத்தே போட்டியிட்டன. காங்கிரஸ் கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கூட்டணி 104 இடங்களில் வெற்றிப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close