மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் பரப்புரையில் ராகுல்காந்தி ஈடுபடுவதால் அங்கு பாஜக வெற்றி பெறுவது நூறு சதவீதம் உறுதி என உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
வரும் 21-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் சந்திக்கும் மகாராஷ்ட்ராவில் அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
மகாராஷ்டிராவின் உமர்கேட்டில் பாஜக வேட்பாளர் நமதேவ் சசானேவை ஆதரித்து யோகி ஆதித்யநாத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேரணியில் பேசிய அவர், “பயங்கரவாதத்தை ஒழிப்பதில் பிரதமர் மோடி உறுதி கொண்டுள்ளார். ஜம்மு-காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்ததன் மூலம் பிரதமர் மோடியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ‘ஒரு இந்தியா, உயர்ந்த இந்தியா’ என்ற கருத்தை நிறுவியுள்ளனர்.
ராகுல் காந்தி எந்தக் கட்சியை ஆதரித்தாலும் அது தோல்வியடையும். காங்கிரஸ் கட்சியை ஆதரித்து ராகுல்காந்தி பரப்புரையில் ஈடுபடுவதால் மகாராஷ்டிராவில் பாஜக வெற்றி பெறுவது நூறு சதவீதம் உறுதி. விவசாயிகளின் நலனுக்காக விரைவான திட்டங்களை கொண்டுவர பாஜகவுக்கு வாக்களியுங்கள்.” எனத் தெரிவித்தார்.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை மீண்டும் நாட முடிவு - மு.க.ஸ்டாலின்
"என் மன உறுதியைக் குலைக்கவே சிறையில் அடைத்தனர்" ப.சிதம்பரம் சாடல்
கருணை மனுவை திரும்ப பெறுவதாக நிர்பயா குற்றவாளி அறிவிப்பு
போக்குவரத்து விதிமீறல்: கோவையில் மட்டும் ரூ.2.9 கோடி அபராதம் வசூல்!
''நீதிமன்றங்களை சாமான்ய மக்களால் எளிதாக நாட முடியவில்லை'' ராம்நாத் கோவிந்த் கவலை