[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை

கோவாவில் 50வது சர்வதேச திரைப்பட விழா - பிரகாஷ் ஜவடேகர்

50th-international-film-festival-will-on-goa-prakash-javdekar

50ஆவது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் வரும் நவம்பர் மாதம் 20ஆம் தேதி தொடங்கும் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். 

இந்த விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் இந்திய மொழிகளில் 26 திரைப்படங்கள் திரையிடப்பட இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் 50 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படங்களும் காட்சிப்படுத்தப்பட இருப்பதாக அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். வருகிற நவம்பர் மாதம் 20ஆம் தேதி முதல் தொடங்கி 28ஆம் தேதி வரை கோவாவில் திரைப்பட விழா நடைபெறும் என்று கூறியுள்ளார். 

இந்தியத் திரைப்படங்களின் பட்டியலில் பார்த்திபன் நடித்த ஒத்த செருப்பு மற்றும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் ஹவுஸ் ஓனர் ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றன. இதேபோல் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட (GULLY BOY) உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களும் காட்சிப்படுத்தப்படுகின்றன. தாதா சாஹேப் பால்வே விருது பெற இருக்கும் அமிதாப் பச்சனை கவுரவிக்கும் விதமாக அவரது படங்களும் திரையிடப்படவுள்ளன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close