[X] Close
JUST IN
  • BREAKING-NEWS குடியுரிமை திருத்த மசோதாவுக்கு தேசியவாத காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS குடியுரிமை திருத்த மசோதாவில் இலங்கை சிறுபான்மையினரையும் சேருங்கள் - பிரசன்னா ஆச்சார்யா, பிஜூ ஜனதாதளம் எம்.பி
  • BREAKING-NEWS குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவிற்கு தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எதிர்ப்பு
  • BREAKING-NEWS 2009 மக்களவை தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: ப.சிதம்பரம் ஆஜராக மேலும் ஒரு மாதம் அவகாசம்
  • BREAKING-NEWS நித்யானந்தா எங்கிருக்கிறார்? - டிச. 12க்குள் கர்நாடக அரசு மற்றும் காவல்துறை அறிக்கை அளிக்க அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS மக்களவையில் ஆயுதச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது
  • BREAKING-NEWS 2020 ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யா பங்கேற்க தடை விதித்தது உலக ஊக்க மருந்து தடுப்பு முகமை

‌ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா..?: இன்று விசாரணை

inx-media-case-can-chidambaram-gets-bail

ஐஎன்எக்ஸ்‌ மீடியா முறைகேடு வழக்கில் ‌முன்னாள் ‌மத்திய நிதியமைச்சர் ப‌.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு‌ உச்சநீதிமன்றத்தில் இன்று‌ விசாரணைக்கு‌ வருகிறது.

சிதம்பரத்தின் ஜாமீன் மனு நீதிபதிகள் ஆர். பானுமதி மர்றும் ரிஷ்கேஷ் ராய் ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரிக்கப்ப‌டவுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி கைது செய்யப்பட்டார்.‌ திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அ‌வரது நீதிமன்‌றக் காவலை வரும் 17-ம் தேதி‌வரை நீட்டித்து‌ டெல்லி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது‌. இந்நிலையில் அவர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.

சிதம்‌பரம் மத்திய நிதியமைச்சராக இருந்த போது ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தில் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடைபெற்றதாக சிபிஐயும், அமலாக்கத்துறையும் வழக்குகள் பதிவு செய்துள்ளன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close