[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திமுகவுக்கு தெம்புள்ளதா என முதலமைச்சர் பழனிசாமி கேள்வி
  • BREAKING-NEWS தேசிய குடியுரிமை திருத்த மசோதாவை மக்களவையில் இன்று தாக்கல் செய்கிறார் அமித் ஷா
  • BREAKING-NEWS கிராமப்புற உள்ளாட்சிப் பதவிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்

தெலங்கானா ஆளுநராக தமிழிசை இன்று பதவியேற்பு

tamilisai-to-take-oath-today-as-new-governor

தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் இன்று பதவியேற்கிறார்.

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை, தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று காலை 11 மணிக்கு ஐதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில், தமிழிசை ஆளுநராக பொறுப்பேற்று கொள்கிறார். அவருக்கு அம்மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, ராகவேந்திரா எஸ்.சவுகான் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். 

முன்னதாக சென்னை வந்த தெலங்கானா ஆளுநர் மாளிகை அதிகாரிகள் ஷிவாங்க் தீக்சித் மற்றும் வேதாந்திரி கிரி தமிழிசையை சந்தித்து பேசினர். பதவியேற்பு நடைமுறைகள் குறித்து அவர்கள் தமிழிசையிடம் விளக்கிக் கூறினர். பதவியேற்பு விழாவில், தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். தமிழகத்தின் சார்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்கிறார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close