[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா, தென்னாப்ரிக்கா இடையே ராஞ்சியில் இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் போட்டி
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

''என்ன கிடைத்ததோ அதை வைத்து திருப்தி அடைய வேண்டும்'' - மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை 

aim-big-don-t-let-disappointment-come-in-way-says-pm-modi

என்ன கிடைத்ததோ அதை வைத்து திருப்தி அடைய வேண்டும் என்றும், இழந்ததை நினைத்து வருத்தப்பட்டால் அடுத்த இலக்கை எட்ட முடியாது எனவும் பிரதமர் மோடி, மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

ஆன்லைன் QUIZ போட்டி மூலம் தேர்வு செய்யப்பட்ட சுமார் 70 மாணவர்கள் மற்றும் பூடான் பல்கலைக்கழகத்திலிருந்து வந்த மாணவர்களும் இன்று அதிகாலை இஸ்ரோ மையத்தில் அமர்ந்து விஞ்ஞானிகளின் பணிகளைப் பார்வையிட்டனர். தொடர்ந்து விக்ரம் லேண்டர் நிலவில் தரையிரங்கும்போது தொடர்பு துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, விஞ்ஞானிகளைத் தேற்றிய மோடி, மாணவர்களைச் சந்தித்தார்.

அப்போது, இஸ்ரோ மையத்தில் நடந்தவற்றை எல்லாம் பார்த்தீர்களா? என மாணவர்களிடம் பிரதமர் மோடி வினவினார். அதற்கு, ஆம் என மாணவர்கள் கூறினர். தொடர்ந்து இங்கு நடந்தவற்றை பற்றி பள்ளி மற்றும் பெற்றோர்களிடம் என்ன கூறுவீர்கள் ? என மோடி கேட்டதற்கு, கடைசி நிமிடம் வரை வெற்றிகரமாக விக்ரம் லேண்டர் ‌பயணம் செய்தது என்றும், நிலவின் மிக அருகில் வந்தபோது சிக்னல் கிடைக்கவில்லை என்றும் கூறுவோம் என ஒரு மாணவி பதிலளித்தார். அதற்கு மிகச் சரியான பதில் என மோடி கூறினார். 

மனவலிமையுடன் இருக்க என்ன செய்ய வேண்டும் என்ற மாணவர்களின் கேள்விக்கு, என்ன கிடைக்கிறதோ அதை வைத்து திருப்தி கொள்ள வேண்டும் என்றும் இழந்ததை நினைத்து வருத்தப்பட்டால் அடுத்த இலக்கை எட்ட முடியாது எனவும் பிரதமர் பதிலளித்தார். தொடர்ந்து பூடானிலிருந்து வந்த மாணவர்களிடமும் மோடி உரையாற்றினார். பின்னர் பிரதமரிடம் மாணவர்கள் ஆட்டோகிராப் பெற்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close