[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

“மீண்டும் பணிக்கு திரும்பும் எண்ணமில்லை” - கருத்து சுதந்திரத்திற்காக ராஜினாமா செய்த ஐஏஎஸ் அதிகாரி

no-intention-to-return-kannan-ias-who-resigned-from-service-over-j-k-is-emphatic

மீண்டும் பணிக்கு திரும்பும் எண்ணமில்லை என கருத்து சுதந்திரம் மற்றும் காஷ்மீர் விவகாரத்திற்காக தன்னுடைய ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்த அதிகாரி கண்ணன் கூறியுள்ளார்.

தாத்ரா - நாகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தில் மின் துறை செயலாளராக பணியாற்றி வருபவர் ஐஏஎஸ் அதிகாரி, கண்ணன் கோபிநாதன். திருச்சூர் அருகே புத்தம்பள்ளியைச் சேர்ந்த இவர், கடந்த ஆண்டு கேரளாவை புரட்டிப் போட்ட வெள்ளத்தின்போது நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார். தான் ஐஏஎஸ் அதிகாரி என்ற அடையாளத்தை மறைத்துக் கொண்டு, செங்கணூரில் உள்ள நிவாரண முகாமில் பொருள்களை பிரித்து அனுப்பும் பணிகளில் ஈடுபட்டதற்காக அவருக்கு பாராட்டுகள் குவிந்தன. 

அதனையடுத்து தனது ஐ.ஏ.எஸ். பதவியை திடீரென கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி கண்ணன் ராஜினாமா செய்தார். சுதந்திரமாக செயல்பட முடியாததாலும் காஷ்மீர் விவகாரம் தொடர்பாகவும் ராஜினாமா செய்ததாகக் கூறிய அவர், அதற்குப் பிறகு பணியை தொடரவில்லை. இதற்கிடையே, ராஜினாமா ஏற்கப்படும் வரை, பணியில் தொடருமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டது. இதுதொடர்பான நோட்டீஸ், அவர் தங்கியுள்ள அரசு விருந்தினர் மாளிகையில் ஒட்டப்பட்டது. 

                

இதுகுறித்து கண்ணன் நியூஸ் மினிட்க்கு அளித்த பேட்டியில், “நோட்டீஸ் அனுப்பியுள்ளது வழக்கமான அலுவல் நடைமுறைதான். ராஜினாமா இதுவரை ஏற்கப்படவில்லை. அதேபோல், நிராகரிக்கப்படவும் இல்லை. அரசு என்னுடைய ராஜினாமா கடிதத்தை மூன்று அல்லது ஐந்து நாட்களுக்குதான் முடிவு எடுக்காமல் வைத்திருக்க முடியும். நீதிமன்றத்திற்கு சென்றால், ஒரு அதிகாரியாக ராஜினாமா செய்யும் உரிமை உண்டு என்பதை நிரூபிக்க முடியும். மீண்டும் பணிக்கு திரும்பும் நோக்கம் எனக்கில்லை. அது முடிவான விஷயம். 

என்னுடைய கருத்தினை வெளிப்படுத்த எனக்கு உரிமை உண்டு. மற்றவர்களுக்காக குரல் கொடுக்க முடியும் என்பதற்காகவே நான் இந்த பணியில் சேர்ந்தேன். ஆனால், என்னுடைய சொந்த கருத்தையே என்னால் வெளிப்படுத்த முடியவில்லை. என்னுடைய ராஜினாமா நான் இழந்த கருத்து சுதந்திரத்தை எனக்கு திரும்பவும் வழங்கும்” என கூறியுள்ளார்.  

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close