[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை
  • BREAKING-NEWS கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்

காஷ்மீரில் சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்றுகிறார் அமித் ஷா?

amit-shah-may-unfurl-national-flag-from-srinagar-s-lal-chowk

சுதந்திர தினத்தன்று காஷ்மீர் பிராந்தியத்தின் ஸ்ரீநகரில் அமித் ஷா தேசியக்கொடி ஏற்றுவார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

ஜம்மு- காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு சமீபத்தில் நீக்கியது. அத்துடன் ஜம்மு- காஷ்மீர் மாநிலம், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு  ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சுதந்திர தினத்தன்று காஷ்மீர் பிராந்தியத்தின் ஸ்ரீநகரில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தேசியக்கொடி ஏற்றுவார் எனத் தகவல் வெளியாகி உள்ளது. காஷ்மீர் மறுசீரமைப்பிற்கு பின் உள்துறை அமைச்சர் அங்கு செல்ல உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close