நாட்டை ஆட்சி செய்த முன்னாள் பிரதமர்களுக்கு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் சந்திரசேகர் குறித்த புத்தகத்தை பிரதமர் மோடி இன்று வெளியிட்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி, “ கடந்த 1977-ஆம் ஆண்டு முதல் முறையாக டெல்லி விமான நிலையத்தில் வைத்து சந்திரசேகரை சந்தித்தேன். அப்போது பைரோன் சிங் செகாவத்துடன் நான் பயணித்தேன். அவர்கள் இருவரும் அரசியல் ரீதியாக வெவ்வேறு கருத்துகளை கொண்டவராக இருந்தாலும் மிகுந்த நட்புடன் இருந்தனர்.
இந்த நாட்டை ஆட்சி செய்த அனைத்து முன்னாள் பிரதமர்களுக்கும் அருங்காட்சியகம் அமைக்கப்படும். எனவே முன்னாள் பிரதமர்களின் வாழ்க்கை முறை குறித்து அவரவர் குடும்பத்தினர் தெரிவிக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்தார்.