[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தனது ராஜினாமா கடிதத்தை புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு அனுப்பினார்
  • BREAKING-NEWS மாமல்லபுரத்தில் இந்திய கலாசார விழா நடத்துவதற்காக ரூ.75 லட்சம் ஒதுக்கி அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணியே தொடரும்; அரசியலில் எதுவும் நடக்கலாம் - துணை முதல்வர் ஓபிஎஸ்
  • BREAKING-NEWS ரஜினி, கமல், விஜய் அனைவரும் மாய பிம்பங்கள், தமிழக அரசியலில் எடுபடாத சக்திகள் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனித்துப்போடியிட தயார் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS சபரிமலை கோயிலுக்கு என கேரள அரசு தனிச்சட்டம் உருவாக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்

‘யோகி ஆதித்யநாத் காட்டாட்சி நடத்துகிறார்’ - பிரியங்கா காவல் குறித்து காங். காட்டம்

congress-criticized-up-government

பிரியங்கா காந்தியை சட்ட விரோத காவலில் வைத்திருப்பதன் மூலம் உத்தரப்பிரதேசத்தில் காட்டாட்சி நடப்பதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் சன்பத்ரா பகுதியில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட மோதலில் 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களது குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்ற உத்தரப் பிரதேச காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மிர்சாபூரில் தடுத்து நிறுத்தப்பட்டார். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனக் கூறி அவரை மிர்சாபூரில் அரசு விருந்தினர் மாளிகையில் தடுப்புக் காவலில் காவல்துறையினர் வைத்துள்ளனர்.

இதை கண்டித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா, பாரதிய ஜனதா அரசு சட்டவிரோதமாக பிரியங்கா காந்தியை கைது செய்திருப்பதாக குற்றஞ்சாட்டினார். படுகொலைகளை தடுக்கத் தவறும் அரசு, பிரியங்கா காந்தியை விடுதியில் அடைத்து, மாநிலத்தைவிட்டு வெளியேற்ற திட்டமிடுவதாக விமர்சித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசு காட்டாட்சி நடத்தி வருவதாகவும் சுர்ஜிவாலா ட்விட்டரில் சாடியுள்ளார்.

பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டது சட்ட விரோதம் என அவரது சகோதரும் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி கூறியுள்ளார். இதற்கிடையே, பிரியங்கா காந்தி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதைக் கண்டித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துமாறு மாநில காங்கிரஸ் கமிட்டிகளுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close