[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரான்ஸில் இன்று நடைபெறும் ஜி7 நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
  • BREAKING-NEWS உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து
  • BREAKING-NEWS லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பெண் உள்பட இருவர் கேரளாவில் கைது

திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

ec-issues-notices-ncp-tmc-cpi-may-lose-national-party-tag

’தேசிய கட்சி அந்தஸ்தை ஏன் ரத்து செய்யக் கூடாது?’ என்று கேட்டு, இந்திய கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தேர்தல் ஆணையத்தால் தேசிய கட்சியாக, ஒரு அரசியல் கட்சி அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றால், நான்கு அல்லது அதற் கு மேற்பட்ட மாநிலங்களில் நடக்கும் மக்களவைத் தேர்தல் அல்லது சட்டப்பேரவைத் தேர்தலில், குறைந்தபட்சம், 6 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். மேலும், நான்கு மக்களவை உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும். 

சமீபத்தில் நடந்த தேர்தல்களில், திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அங்கீகாரத்தைத் தக்க வைக்கும் அளவுக்கு வெற்றி பெறவில்லை. இதையடுத்து, அந்தக் கட்சிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள, தேசிய கட்சி அந்தஸ்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என கேட்டு, தேர்தல் ஆணையம் நேற்று, நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இதற்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்குள் பதிலளிக்க, தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close