[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

தமிழிலும் வெளியானது உச்சநீதிமன்ற தீர்ப்பு

supreme-court-judgment-released-in-tamil-language

உச்ச நீதிமன்ற தீர்ப்பு, முதன்முறையாக தமிழில் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது. 

உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளின் விவரங்கள் இந்தி, ஒடியா, அசாமி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு உச்ச நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றப்படும் என அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது. தென் னிந்திய மொழிகளில் கன்னடமும், தெலுங்கும் இடம்பெற்றிருந்த நிலையில், செம்மொழியான தமிழ் இடம்பெறாதது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

இந்நிலையில், ஏற்கெனவே அறிவித்தபடி பிராந்திய மொழிகளில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் வெளியிடப்பட்டன. உச்ச நீதி மன்ற கூடுதல் கட்டடத்தின் திறப்பு விழாவில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மொழிபெயர்ப்பு செய்யப் பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நகல்களை வெளியிட்டார். 

இந்நிகழ்ச்சியில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ராம்நாத் கோவிந்‌த், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் தீர்ப்புகள் பிராந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு, முதன்முறையாக தமிழிலும் வெளியாகியுள்ளது. சரணடைய விலக்கு கோரிய சரவணபவன் ராஜகோபால் வழக்கில், உச்சநீதிமன்ற உத்தரவு தமிழில் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close