[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

ஒரு எம்.எல்.ஏ., 14 கவுன்சிலர்கள் பாஜகவிற்கு தாவல் - சரியும் மம்தாவின் பலம்

it-s-an-earthquake-bengal-s-trinamool-mla-wilson-champramary-14-councillors-join-bjp

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து மேலும் எம்.எல்.ஏ ஒருவர் மற்றும் 14 கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்.

தலைநகர் டெல்லியில் இன்று பாஜகவின் மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்கியா, முகுல் ராய் மற்றும் திலிப் கோஷ் ஆகியோர் பத்திரிகையாளர் சந்தித்து ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது மேற்கு வங்கத்தின் அலிபுர்தார் மாவட்டத்தில் உள்ள கல்ச்சினி தொகுதி எம்.எல்.ஏ வில்சன் பாஜகவின் இணைந்தார். அவருடன் தெற்கு தினாஜ்பூர் ஸிலா பரிஷத் பகுதியில் இருந்து 14 கவுன்சிலர்களும் பாஜகவில் சேர்ந்தனர். அந்தப் பகுதியில் மொத்த கவுன்சிலர்களின் எண்ணிக்கையே 18 தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதில்10 பேர் டெல்லி பாஜகவிலும், மற்ற 4 பேர் மேற்கு வங்க பாஜகவிலும் இணைந்தனர். 

நிகழ்ச்சி பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முகுல் ராய், “இது ஒரு பூகம்பம். ஷில பரிஷத்தில் உள்ள பெரும்பாலான கவுன்சிலர்கள் பாஜகவில் சேர்ந்துவிட்டனர். இது முன்னெப்போதும் இல்லாத ஒன்றாகும்” என்று கூறினார். அவரைத் தொடர்ந்து பேசிய எம்.எல்.ஏ வில்சன், “நான் இப்போது வரை ஒரு எம்.எல்.ஏ-வாக இருக்கிறேன். ஆனால் எனது தொகுதிக்கு எந்த ஒரு வளர்ச்சி திட்டத்தை என்னால் கொண்டுவர முடியவில்லை. எனது தொகுதியின் திட்டங்கள் அனைத்தும் கொல்கத்தாவை சேர்ந்த தலைவர்கள் எடுத்துக்கொள்கின்றனர். இதுதொடர்பாக நான் கட்சித் தலைமை மற்றும் அமைச்சர்களிடம் கூறிவிட்டேன். ஆனாலும் ஒன்றும் நடக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த நான் பாஜகவில் இணைந்துவிட்டேன்” என்று தெரிவித்தார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close