[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

கடனுக்காக பெண்ணை கம்பத்தில் கட்டி துன்புறுத்தியவர்கள் கைது

a-woman-torture-for-loan-in-karnataka

வாங்கிய கடனைத் திருப்பித் தரவில்லை எனக்கூறி பெண்ணைக் கட்டி வைத்துத் துன்புறுத்திய கொடுமை பெங்களூரு அருகே நிகழ்ந்துள்ளது. 

கர்நாடக மாநிலம் கொடிகெஹள்ளி பகுதியில் உள்ள ஒரு பெண், அப்பகுதியைச் சேர்ந்த சிலரிடம் கடன் வாங்கியுள்ளார். சில நிதி நெருக்கடியால் வாங்கிய கடனை அப்பெண் திருப்பிச் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் கடன் கொடுத்தவர்கள் ஆத்திரமடைந்து அப்பெண்ணை தாக்கியுள்ளனர். அத்துடன் தகாத வார்த்தைகளிலும் திட்டியதாக தெரியகிறது. 

பின்னர் அந்தப் பெண்ணை அங்குள்ள ஒரு மின்கம்பத்தில் கட்டி வைத்துத் துன்புறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக அப்பகுதியை சேர்ந்த சிலர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர், இதற்குக் காரணமாக இருந்ததாக 7 பேரைக் கைது செய்தனர். அத்துடன் பெண்ணை துன்புறுத்தியது தொடர்பாக அவர்களிடம் விசாரித்து வருகின்றனர். கடனை திருப்பிச் இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close