[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

அருணாச்சல விமான விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடல்கள் மீட்பு 

iaf-team-recovers-an-32-black-box-from-crash-site

ஏஎன்32 விமான விபத்தில் உயிரிழந்த 13 பேர்களின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. 

இந்திய விமானப் படையின் விமானம் ஏஎன்-32 ஜூன் 3ஆம் தேதி மதியம் 12.25 மணிக்கு அசாம் மாநிலம் ஜோர்கட்டிலிருந்து அருணாச்சல பிரதேசத்தின் மேசூகா பகுதிக்கு புறப்பட்டது. இதனையடுத்து விமானம் மதியம் 1 மணியளவில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இந்த விமானத்தில் 13 பேர் பயணம் செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து இந்திய விமானப் படை, இந்திய ராணுவம் உள்ளிட்டவர்கள் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஒருவார கால தேடுதலுக்குப் பிறகு அந்த விமானத்தின் பாகங்கள் அருணாச்சலப் பிரதேசத்தின் லிப்போ பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஏஎன்-32 விமானத்தில் பயணித்த 13 பேரும் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை இன்று தெரிவித்தது. இந்த விமானத்தின் பகுதிகள் கண்டிபிடிக்கப்பட்ட அருணாச்சலப் பிரதேசத்தின் லிப்போ பகுதியை இன்று தேடுதல் பணியாளர்கள் சென்றடைந்தனர். இந்தச் சூழலில் ஏஎன்-32 விமான விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. 

அதேபோல் விமான விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து கருப்புப் பெட்டியும் மீட்கப்பட்டுள்ளது. இதில் இருக்கும் விமான தரவு ரெக்கார்டர் மூலம் 30 பாராமீட்டர் வரையுள்ள அலைகளை பதிவு செய்ய முடியும். இதில் விமானத்தின் இயந்திரம், வேகம் மற்றும் விபத்திற்கு காரணமான இதர விஷயங்களும் பதிவாகியிருக்கும். மேலும் கருப்பு பெட்டியில் இருக்கும் காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் விபத்திற்கான தகவல்களையும் விமான ஓட்டிகளின் கலந்துரையாடல்களையும் பதிவு செய்து வைத்திருக்கும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close