[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 பிரமோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு. இரண்டரை மணி நேர தேர்வு மூன்று மணி நேரமாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS மேட்டூர் அணை நிரம்பி வருவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மாமியாரை கொடூரமாகத் தாக்கிய மருமகள் கைது

haryana-woman-pulls-hair-thrashes-80-yr-old-mother-in-law-arrested

மாமியாரை, மருமகள் கடுமையாக தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட அந்த மருமகள் கைது செய்யப்பட்டார்.

குழந்தையை பெற்று, வளர்த்து அவர்களுக்கு திருமணமும் செய்து வைத்து அழகு பார்க்கிறர்வர்கள்தான் பெற்றோர்கள். ஆனால் அவர்களுக்கு வயதாகி விட்டாலே, குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு தேவையில்லாதவர்கள் ஆகிவிடுகின்றனர் இந்தக் காலத்தில். அவர்களால் எந்த காரியமும் செய்ய முடியாது என்ற நிலை ஏற்படும்போது, கூடுதல் அக்கறையுடன் கவனிப்பதை விட்டு விட்டு அவர்களை மேலும் மேலும் காயப்படுத்தவே செய்கின்றனர்.

சமீபத்தில் இளம்பெண் ஒருவர் வயதான மற்றொரு பெண்ணை கடுமையாக தாக்கும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. வீடியோவில், கட்டிலில் அமர்ந்திருக்கும் அந்த வயதான பெண்ணின் தலைமுடியை பிடித்து ஆட்டுவதும், கால் கைகளில் சகட்டுமேனிக்கு கடுமையாக தாக்குவதும் என தன்னால் முடிந்த அளவிற்கு கோபத்தை வயதான பெண்ணிடம் இறக்கி வைத்திருந்தார் அந்த இளம்பெண்.

வீடியோ வேகமாக பரவி அதுதொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தாக்கிய இளம்பெண் மருமகள் என்பதும், தாக்கப்பட்டவர் வயதான மாமியார் என்பதும் தெரியவந்துள்ளது. 80 வயது ஆகிவிட்டதால் மாமியாரை ஒர பாரமாகவே கருதியிருக்கிறார் அந்த மருமகள். அத்துடன் வீட்டின் பெரும் சுமையாகவே தனது மாமியாரை பார்த்த மருமகள் எரிச்சல் அடைந்து நடத்திய தாக்குதல்தான் அது. பக்கத்து வீட்டின் மாடியிலிருந்து அவர்களுக்கு தெரியாமல் யாரோ ஒருவர் இந்த வீடியோவை எடுத்துள்ளார். சம்பவம் நடைபெற்ற இடம் ஹரியான மாநிலத்தில் உள்ள மகேந்தர்கர் மாவட்டம்.

இந்த சம்பவம் ஹரியானா முதலமைச்சர் வரை சென்றுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள அம்மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், “ மிகவும் வருந்தத்தக்க மற்றும் கண்டிக்கத்தக் செயல் இது. நாகரிக சமுதாயத்தில் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல” எனக் கூறியுள்ளார்.

 

போலீசாரின் விசாரணையில் தாக்கப்பட்ட மாமியார் சந்த் பாய் என்பது தெரியவந்துள்ளது. இவரின் கணவர் எல்லை பாதுகாப்பு படையில் உதவி ஆய்வாளராக பணியாற்றியவர். ஆனால் தற்போது உயிருடன் இல்லை. சந்த் பாய்க்கு பென்சனும் வந்துக்கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் தான் தாக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்திய மருமகளான காந்தா தேவியை கைது செய்துள்ள போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close