[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

“தேர்தல் முறைகேட்டுப் புகார்கள் கவலை ‌தருகிறது” - பி‌ரணாப் முகர்ஜி  

pranab-mukherjee-says-complaints-of-election-abuse-are-worrying

வாக்காளர்கள் அளித்த தீர்ப்பில் முறைகேடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள புகார்கள் கவலை ‌தருவதாக முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். 

வாக்கு எண்ணிக்கையை முறையாக நடத்த வேண்டும் என்று ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் 22 எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்றாக சேர்ந்து தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர். இதனிடையே வாக்காளர்கள் அளித்த தீர்ப்பில் முறைகேடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள புகார்கள் கவலை ‌தருவதாக முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். 

Related image

இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், வாக்கு இயந்திரங்கள் தேர்தல் ஆணை‌யத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் அவற்றின் பாதுகாப்புக்கு அந்த அமைப்பே முழுப் பொறுப்பு என்றும் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். வாக்காளர்களின் தீர்ப்புதான் இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை என்றும் அதன் மீது சிறிய சந்தேகம் ஏற்படக் கூட‌ அனுமதிக்க கூடாது என்றும் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். 

மக்களின் தீர்ப்பு புனிதமானது என்றும் அதை நடைமுறைப்படுத்துவதில் ஒரு அணு அளவு நியாயமான சந்தேகம் இருந்தாலும் அதற்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் தெரிவித்துள்‌ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close