[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

பயங்கரவாதிகளை கொல்லக் கூட தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டுமா? - பிரதமர் மோடி 

will-jawans-take-poll-body-s-permission-before-killing-terrorists-says-pm

தேர்தல் நடந்து கொண்டிருக்கும்போது எல்லையில் நமது ராணுவம் பயங்கரவாதிகளை கொன்று குவித்து வருகிறதே என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புவது விந்தையாக உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகரில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், இந்த மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் தோல்வி உறுதியாகி விட்டதாக கூறினார். அகிலேஷ் யாதவும், மாயாவதியும் உத்தரப் பிரதேச முதல்வர்களாக பதவி வகித்த காலத்தைவிட, தாம் அதிக ஆண்டுகள் குஜராத் முதல்வராக இருந்துள்ளதாகவும், ஆனபோதிலும் தம்மீது ஊழல் குற்றச்சாட்டு வந்ததில்லை என்றும் மோடி குறிப்பிட்டார். 

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் கூட்டு பாலியல் வழக்கு தொடர்பாக மாயாவதி கூறிய கருத்துக்கு பதிலடி கொடுத்த பிரதமர், பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையிலேயே நியாயம் கிடைக்க வேண்டுமெனில், ராஜஸ்தான் காங்கிரஸ் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை மாயாவதியால் வாபஸ் பெற முடியுமா என்றும் சவால் விடுத்தார். எல்லையில் தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளை கொன்று குவித்தால் கூட, தேர்தல் நேரத்திலுமா தாக்குதல் நடத்துவது என எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றனர் என்றும், அப்படியென்றால், தாக்குதல் நடத்த தேர்தல் ஆணையத்திடம் முன் அனுமதி பெற வேண்டுமா என்றும் பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார். தேர்தலில் எதிர்க்கட்சிகள் தோல்வியடைவது உறுதி என்றும் மோடி தெரிவித்தார். 

இதைத் தொடர்ந்து மத்தியபிரதேச மாநிலம் கந்த்வா பகுதியில் நடைபெற்ற பரப்புரையில் பேசிய பிரதமர், ஹிந்து பயங்கரவாதம் என்ற பிரசாரத்தின் மூலம் நமது தேசத்தின் ஆன்மிக பாரம்பரியத்தை சீரழிக்க காங்கிரஸ் சதி செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close