[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS மக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்?- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
  • BREAKING-NEWS வேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்
  • BREAKING-NEWS 10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து
  • BREAKING-NEWS காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது

ஆன்லைன் வெப்சீரிஸ்: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

want-centre-s-reply-on-plea-to-regulate-netflix-amazon-prime-supreme-court

ஆன்லைன் வெப்சீரிஸ்-களுக்கு விதிமுறைகள் விதிக்க கோரிய மனு மீது மத்திய அரசு பதில் அளிக்க, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமேசான் பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ் உட்பட பல்வேறு ஆன்லைன் நிறுவனங்கள், வெப் சீரீஸ் எனப்படும் இணைய தொடர்களை ஒளிபரப்பி வருகின்றன. இந்த தொடர்கள் தணிக்கை செய்யப்படுவதில்லை. இதையடுத்து டெல்லி உயர் நீதிமன்றத்தில், தொண்டு நிறுவனம் ஒன்றில் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. 

அதில், அமேசான், நெட் பிளிக்ஸ் போன்ற இணைய வீடியோ தயாரிப்பு நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் இல்லாததால் ஆபாசம் மற்றும் வன்முறை காட்சிகள் அதிகம் இடம் பெறுகின்றன. பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகளும் இடம்பெறுவதால் இவற்றைத் தயாரிக்கும் நிகழ்ச்சிகளுக்கு விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, ஆன்லைன் நிறுவனம் தயாரிக்கும் நிகழ்ச்சிகளுக்கு, மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சக அனுமதி தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்தது. இதையடுத்து இம்மனுவை, டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு விதிமுறைகள் விதிப்பது தொடர்பாக, மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close