[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது

போலி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிக்கு சரமாரி அடி - வீடியோ

jamshedpur-woman-thrashes-man-with-slipper-for-posing-as-anti-corruption-officer-demanding-rs-50k

ஜார்க்கண்டில் பெண் ஒருவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி என்று கூறி பணத்தை கொள்ளையடிக்க முயன்றவரை அந்தப் பெண் சரமாரியாக தாக்கிய காட்சி வெளியாகியுள்ளது.

ஜம்ஷெட்பூரைச் சேர்ந்த ராக்கி வர்மா என்பவரின் வீட்டுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி என்று கூறி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சென்றுள்ளார். வீட்டில் இருந்த பெண்ணிடம் அவரது கணவர் லஞ்சப் பணத்தை பெற்றதாகவும் இதை மறைக்க 50 ஆயிரம் ரூபாய் பணம் தந்தால் விட்டுவிடுவதாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார். 

இதனிடையே தனது தோழிகளின் உதவியுடன் அந்த நபர் போலி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி என ராக்கி வர்மா அறிந்துகொண்டார். இதையடுத்து கணவருக்கு தகவல் தெரிவித்த அவர், தோழிகளின் உதவியுடன் போலி அதிகாரியை பிடித்து தாக்கினார். ராக்கி வர்மாவின் கணவரும் அந்த போலி லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரியை காவலர்கள் முன்னிலையிலேயே கடுமையாக தாக்கினார். விசாரணையில் ராக்கி வர்மாவின் உறவினரே போலி அதிகாரியை அனுப்பியதாக தெரியவந்துள்ளது.

 

இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ஒருவர் போலி அதிகாரியை தடியால் அடிக்கிறார். பின்னர், அந்தப் பெண் செருப்பை எடுத்து போலி அதிகாரியின் பின் மண்டையில் சரமாரியாக தாக்குகிறார். பின்னர் போலீசார் அவரை மீட்டு விசாரணைக்கு அழைத்து செல்கின்றனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close