[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
  • BREAKING-NEWS போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் நபர்கள் கருணை மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்கக் கூடாது - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS தெலங்கானா: 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது - தெலங்கானா போலீஸ்
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் பொன் மாணிக்கவேல் ஒப்படைக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS நித்யானந்தா எங்கு இருக்கிறார் என்பதை அறிவதில் சிரமம் இருக்கிறது - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

’காவலாளி திருடன்’ என்ற கோஷம் தொடரும்: ராகுல் காந்தி பேட்டி

chowkidar-chor-hai-will-remain-our-slogan-rahul-gandhi

’நாட்டின் காவலாளி திருடன்’ என்ற எங்கள் கோஷம் தொடரும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களை இன்று சந்தித்தார். 

அப்போது அவர் கூறும்போது, ’’ இப்போது நாட்டின் பெரும் பிரச்னையாக இருப்பது வேலை வாய்ப்பின்மை, மோடி நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்துவிட்டார். 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்று சொன்னீர்களே, அது என்னவானது என்று நாடு,  மோடியை கேட்கிறது. ஆனால், விவசாயிகள் பற்றியும் வேலை வாய்ப்பின்மைப் பற்றியும் அவர் ஒரு வார்த்தை பேசுவதில்லை.

மோடியை விமர்சித்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் நான் மன்னிப்பு கேட்டாலும் பாஜகவிடம் மோடியிடமும் கேட்கவில்லை. ’நாட்டின் காவலாளி திருடன்’ என்ற எங்கள் கோஷம் தொடரும். 

ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளும் அவர் நினைப்பது போல, நரேந்திர மோடியின் தனிப்பட்ட சொத்து அல்ல. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, வீடியோ கேமில் மட்டும்தான் துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது என்று பிரதமர் மோடி கூறி இருப்பதன் மூலம் காங்கிரசை அல்ல, ராணுவத்தை அவமதித்திருக்கிறார்.

பயங்கரவாதி மசூத் அசார் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர். ஆனால், அவரை பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பியது யார்? பயங்கரவாதத்துக்கு பணிந்து அவரை விடுவித்தது, காங்கிரஸ் அல்ல, பாஜக அரசு.

காங்கிரஸ் ஆட்சியில் ஆயுத ஊழலில் ஈடுபட்டதாக என் மீது அமித்ஷா குற்றச்சாட்டு கூறியிருக்கிறார். எனக்கு தெரிந்து நான் எந்த தவறும் செய்யவில்லை. எந்த விசாரணைக்கும் தயாராக இருக்கிறேன். ஆனால் அதே நேரம் ரபேல் விவகாரத்திலும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
ஐந்து வருடத்துக்கு முன் நரேந்திர மோடி 10-15 வருடம் ஆட்சி செய்வார். அவரை வெல்ல முடியாது என்று சொன்னார்கள். ஆனால் காங்கிரஸ் அவரை இடித்து தள்ளிவிட்டது. அது ஒரு வெற்று அமைப்பு. இன்னும் 10, இருபது நாளில் முழுவதுமாக வீழ்ந்துவிடும்’’ என்றார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close