ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என்று கூறிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரும் மனுக்கள் மீது, புதிய ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதையடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, புதிய ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடத்த சம்மதித்தன் மூலம், பிரதமர் மோடியை திருடன் என உச்சநீதிமன்றம் கருதுகிறது எனும் பொருள்படும் வகையில் பேசினார்.
இந்நிலையில் ரபேல் குறித்த உத்தரவில் மோடியை பற்றி நீதிபதி எதுவுமே கூறாத நிலையில், அவர் பேச்சை ராகுல் திரித்துக் கூறியுள்ளார் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டினார். மேலும், இது நீதிமன்ற அவமதிப்பு எனவும் அவர் கண்டனம் தெரிவித்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக பாரதிய ஜனதா எம்பி மீனாட்சி லேகி, ராகுல் காந்தி மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தார். இவ்வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் வரும் 22 ஆம் தேதிக்குள் அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று, நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
மாணவர்கள் மீது தடியடி : தமிழகத்தில் வெடித்த மாணவர்கள் போராட்டம்...!
'இலங்கைத் தமிழர்களை ஏன் ஒதுக்கினீர்கள்' - ப.சிதம்பரம் கேள்வி
“வெளியே இருப்பவர்களுக்கு எப்படி தெரியும்” - ஜடேஜா ரன் அவுட் சர்ச்சை குறித்து கோலி கருத்து
‘ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, மாநிலக்கட்சி எல்லாமே எனக்கு எதிராக உள்ளது’ - நித்யானந்தா புகார்
ஜாமியா மாணவர்கள் மீது தடியடி - டெல்லியில் விடிய, விடிய போராட்டம்